இன்று சைக்கிள் ஓட்டுவது சுலபமானதாக இருக்கிறது. தற்போது ‘கியர்‘ வைக்கப்பட்ட சைக்கிள்கள் கூட வந்து விட்டன. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டுவது அவ்வளவு சுலபமில்லை. முன் சக்கரம் பெரியதாகவும், பின் சக்கரம் மிகச்சிறியதாகவும் இருக்கும். இந்த சைக்கிளில் ‘பேலன்ஸ்‘ செய்து ஓட்டுவது மிகப் பெரிய சாதனையாகும்.
அன்றைய காலக்கட்டத்தில் ஒழுங்கான சாலைகளும் இல்லை. உலகம் முழுவதும் கரடுமுரடான சாலைகளே இருந்தன. இதில் பயணம் செய்வது கஷ்டமான காரியம். அத்தகைய நிலையில் சைக்கிளில் இந்த உலகை சுற்றி வருவது என்பது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை தான். இதனை சுமார் 120 வருடங்களுக்கு முன்பு செய்து முடித்திருக்கிறார் தாமஸ் ஸ்டீவென்ஸ்.
முதல் கட்டமாக 1884-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சைக்கிளில் 3 ஆயிரம் மைல் பயம் செய்து அமெரிக்காவை கடந்து பாஸ்டன் நகருக்கு சென்றார். அதிலும் அவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து காணப்பட்டது. அவரிடம் இருந்த பணமும் செலவாகிவிட்டது. அந்த நேரத்தில் சைக்கிள்கள் உற்பத்தி செய்து வரும் தொழிற்சாலை உரிமையாளரான கர்னல் ஏ.ஏ.போப் என்பவர் ஸ்டீவென்சுக்கு புதிய சைக்கிள் ஒன்றை வழங்கி பண உதவியும் செய்தார்.
பின்னர் தாமஸ் ஸ்டீவன்சன் அமெரிக்காவில் இருந்து கப்பலில் ஐரோப்பா போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து சைக்கிளில் பெர்சியா, இந்தியா தூரகிழக்கு நாடுகளில் பயணம் செய்தார்.
சைக்கிளிலேயே 3 ஆண்டுகள் உலகைச் சுற்றிவிட்டு 1889-ம் ஆண்டு ஜனவரியில் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்தார்.
தாமஸ் ஸ்டீவன்சின் இந்த முயற்சியை பாராட்டி பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளிவந்தன. சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை அவர் புத்தகமாக விவரித்து எழுதினார்.
0 Comments