முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக 5000 பேர்
நுகேகொட பேரணிக்கு அழைத்து வந்து காட்டினால் தான் அரசியலைவிட்டு
விலகுவதாக, தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில்
தெரிவித்திருந்தார்.
இதே சவால் எதிர்வரும் 6ஆம் திகதி கண்டியில் இடம் பெறவுள்ள பேரணிக்கும் செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொட பேரணிக்கு வந்தவர்களில் 12000 பேர் மாத்திரமே சொல்வதை கேட்கக்கூடியவர்கள். மற்றைய அனைவரும் குடிகாரர்கள் என அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் கண்டி பேரணிக்கு தேசியவாதமுடைய சிங்க இலட்சனையுடைய கொடி மற்றும் பௌத்த கொடிகளுடன் யாரேனும் கலந்து கொண்டால் தான் முன்வைத்த சவால் செல்லுபடியாகாதென அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments