Subscribe Us

header ads

மஹிந்தவும் நாமல் பேபியும் நன்றாக குளித்திருக்கின்றார்கள்!- ரணில் கிண்டல்...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது மகன் நாமல் ராஜபக்ச பேபியும் நன்றாக குளித்திருக்கின்றார்கள் என்பது நன்றாக புரிகின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் வருவதற்கு முன்னதாக அலரி மாளிகையின் நீர் கட்டணம் 13 லட்ச ரூபாவாகும்.மஹிந்த ஐயாவும் நாமல் பேபியும் நன்றாக குளித்துள்ளார்கள் என்பது புரிகின்றது.

நுகோகொடை கூட்டத்திற்கு சென்றவர்கள் மஹிந்தவின் கள்ளர்களேயாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துண்டு துண்டுகளாக பிளவடைவது எமக்கு நல்லதே.
நாம் வெறுமனே கள்ளர்களை பிடிக்க மாட்டோம். கள்வர்களை நிச்சயமாக பிடிப்போம்.

மஹிந்த ஐயா அண்மையில் விமல் வீரவன்சவின் மனைவியை பார்வையிடச் சென்றுள்ளார்.

“ச்சீ பாருங்கள் செய்யும் வேலைகளை எங்கள் காலத்தில் இவ்வாறு பழிவாங்கல்கள் இடம்பெறவில்லை என மஹிந்த கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் வாயிலா கூறுகின்றார் என்பது புரியவில்லை எனவும் நிமால் சிறிபால டி சில்வாவும் கள்வர்களை பாதுகாத்து வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments