பிபில, தொடம்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் இளைஞர் ஒருவரைப் பிடித்த இரு கான்ஸ்டபிள்கள் அந்த இளைஞனை மேற்சண்டை (ஷேர்ட்) இன்றியே பிரதான வீதி வழி ஊடாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்ணுற்ற அங்கு நின்ற மக்கள் அவ்வாறு அந்த இளைஞனை அழைத்துச் செல்ல வேண்டாம் என பொலிஸாரைக் கேட்டுள்ளனர். அந்த இளைஞனை வாகனத்தில் அழைத்துச் செல்லுங்கள் என்று சத்தமிட்டுள்ளனர்.
ஆனால் இந்த இரண்டு பொலிஸ் கான்டபிள் “சேர்“மாரும் அதனை கணக்கில் கொள்ளாமல் அந்த இளைஞனைத் தொடர்ந்தும் பிரதான வீதி வழியே அழைத்துச் சென்றுள்ளனர்.
பொறுமை இழந்த பொதுமக்கள்.. இப்போது நாட்டில் நிலவுவது நல்லாட்சி. எனவே அந்த அந்த இளைஞனை வாகனத்தில் அழைத்துச் செல்லுங்கள் என கூக்குரல் இட்டுள்ளனர்.
நன்றி: சிங்களத்தில் லங்கா தீப
தமிழில்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்



0 Comments