முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிற் கட்சியில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இலங்கைத் தொழிற் கட்சியின் தலை வராக ஏ.எஸ்.பி.லியனகே திகழ்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ விற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதி யளிக்கப்படாவிட்டால், தமது கட்சியின் கீழ் அவரைப் போட்டியிடச் செய்யப் போவதாக லியனகே தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து பகிரங்கமாக அறி விக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி வர்த்தகரான லியனகே கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும்இ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவாகவே தேர்தல் காலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments