Subscribe Us

header ads

மீண்டும் இராணுவ உடையில் சரத் பொன்சேகா - பீல்ட் மார்சலாக பதவி ஏற்கிறார்


ஜெனரல் சரத் பொன்சேகாவை உத்தியோக இராணுவ உடை அணிந்து வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பீல்ட் மார்சல் தரநிலைக்கு உயர்த்தப்படும் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளார். 

இந்நிகழ்வில் சேனைத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொன்சேகா கௌரவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த நிகழ்விற்கு பொன்சேகா உத்தியோகபூர்வ இராணுவ உடையில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீல்ட் மார்சல் பதவிக்குரிய சம்பளம், உத்தியோகபூர்வ வாகனம், இராணுவப் பாதுகாப்பு, உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் என்பனவும் வழங்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

Post a Comment

0 Comments