மேற்கு வங்காளத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமம் உள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த நான்கைந்து பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 71 வயது கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தற்போது அவர் ரனகட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த கன்னியாஸ்திரியை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனவலியால் அவதிப்படும் அந்த கன்னியாஸ்திரி தனது நிலையை பொருட்படுத்தாமல் சம்பவம் நடந்த அந்த பள்ளி மற்றும் அங்கு படிக்கும் மாணவ்-மாணவியரின் எதிர்காலம் குறித்து அதிகமாக கவலைப்படுவதாக மருத்துவமனை ஆய்வாளர் அடிந்தர்நாத் மொண்டல் தெரிவித்துள்ளார். தனக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து விடுமாறு பிரார்த்தனை செய்து கொண்டார்.-DINAKARAN-
0 Comments