தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்த்த 9 வயதான புத்திசாலி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தவாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த அவங்கிர் கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுநாத் என்பவரின் மகன் சித்தேஷ் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6.30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தை அந்த சிறுவன் கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான்.
பின்னர் தனது தந்தையிடம் அதனை தெரிவித்த போது, அவர் விளையாட்டாக கூறுகிறான் என்று அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். இதுகுறித்து, சிறுவன் சித்தேஷ் கூறியதாவது, தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டதும் நான் பயந்து விட்டேன். எனது தந்தையிடம் இதுகுறித்து கூறுயதும், நான் விளையாட்டாக சொல்வதாக எனது தந்தை நினைத்ததால், நான் அவரை சம்பவ இடத்திற்கு இழுத்து சென்றேன் என்றான். அந்த நேரத்தில் சில ரயில்கள் வரும் வேளை நெருங்கியது. அப்போது அந்த வழியாக வரும் ரயில்களை நிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் என்று மஞ்சுநாத் கூறினார்.
இதனையடுத்து, ரயில் வரும் நேரம் நெருங்கியதையடுத்து, திடீரென தனது மகன் சித்தேஷ் தனது சிகப்பு பனியனை எடுத்து ஒரு குச்சியில் சுத்திக்கொண்டு, தண்டவாளத்தில் சுமார் 7.30 மணியளவில் ரயில் வரும் பக்கம் ஓடினான். அப்போது, ஹீப்ளி-சித்ரதுர்கா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. சிறுவன் சிகப்பு துணியை காட்டிக் கொண்டி ஓடி வருவதை கண்ட ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திதாக சிறுவனின் தாயார் தெரிவித்தார். ரயிலில் உள்ள பயணிகள் அந்த சிறுவனை பாராட்டினர்.
இதனையடுத்து அந்த சிறுவனுக்கு தைரிய விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வே இன்ஜினியர் ஒருவர் அவனது தைரியத்தை பாராட்டி ரூ.500 வழங்கினார். என்று தவாங்கீர் ரயில்வே கோட்ட அதிகாரி திப்பையா தெரிவித்தார்.
0 Comments