உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியில் தரிந்து கௌசால் இணைக்கப்பட்டிருந்தார்.
காயமடைந்த ரங்கன ஹேரத்துக்கு பதிலாகவே தரிந்து கௌசால் இணைக்கப்பட்டிருந்தார்.
சுழற்பந்து வீச்சாளரான இவரின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
இந்நிலையில் தரிந்து கௌசால் மர்ம சுழற்பந்து வீச்சாளர் என அணியின் தலைவர் மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.மேலும் இவரை முத்தையா முரளிதரனுடனும் ஒப்பிட்டுள்ளார்.
22 வயதான தரிந்து கௌசால் இலங்கை அணிக்காக ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான இப் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தினார்.
ஹேரத்துக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மார்ச் மாத ஆரம்பத்தில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டார்.
இதுதவிர 31 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 182 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அப்போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்தவர் தரிந்து கௌசால் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments