ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கலந்து பேசியது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவர் என்ற வகையில், கட்சியின் பிரச்சினைகள் குறித்து அவரை சந்தித்து பேச முடியாத நிலைமை காணப்படுவதாக சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதியை அவசரமாக தொலைபேசியில் கூட தொடர்புகொண்டும் கலந்துரையாட முடியவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கட்சியினர் தமது தொகுதிகளின் பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல முடியாது மக்கள் மத்தியில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


0 Comments