ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் சில நாட்களாக மெதமுல்ல வீட்டில ஓய்வு பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன் நலன் வேண்டி நாடு பூராகவும் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் வரலாற்று இராசதானியான யாப்பகூவைக்கு சென்று தனது முதல் பூஜை வழிபாடுகளை ஆரம்பித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மற்றுமொரு பூஜைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை கதிர்காமத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments