இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கிடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று காலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய தலைமன்னார் பியர் பகுதிக்கு இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
தலைமன்னாரில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சற்றுநேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.




0 Comments