தனது ரஷ்ய மனைவியை சூட்கேசில் அடைத்து பிரான்சுக்கு கொண்டு செல்ல முயன்ற கணவரை எல்லை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
போலந்து நாட்டில் தெரஸ்போலிலிருந்து மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் 60 வயது மதிக்கத்தக்க நபர் வந்துள்ளார்.
அதனை பார்த்த எல்லை காவல் அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.
உள்ளே 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இருவரும் கணவன்– மனைவி எனறும், தான் பிரான்சையும், மனைவி ரஷியாவையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தார். மேலும் போலந்து நாட்டிலிருந்து பெலாரஸ் செல்லுவதற்காக, என் மனைவிக்கு பாஸ்போர்ட் இல்லாததால் இவ்வாறு அழைத்துவந்தேன் என்றார்.


0 Comments