முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டியதாக மேர்வின் சில்வா மீது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர வேண்டுமென கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் தினேஸ் குணசேகரவினால் நேற்றைய தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிரதிநிதி ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாகவும், நாடு திரும்பியதும் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமையை அறிந்து கொண்டு இவ்வாறு முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமது முறைப்பாட்டுக்கு உரிய பதிலை காவல்துறையினர் வழங்கத் தவறினால், வழக்குத் தொடரவும் அஞ்சப் போவதில்லைஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரும் நீதிமன்றமும் மட்டுமே நாட்டுப் பிரஜைகளை கைது செய்யவோ தடுத்து வைக்கவோ முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய நபர்கள் இவ்வாறு பிரஜைகளை தடுத்து வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments