விமானம் பறக்க தயாராகி, ஓடு பாதையில் கிளம்பிய போது, விமானத்தின் அவசர காலக் கதவை அது என்னவென்று தெரியாமல் திறந்ததால் கைது செய்யப்பட்ட சீனருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
சீனாவின் ஊரும்கி விமான நிலையத்தில் தனது மனைவியுடன் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வந்த சீனர், பயத்தில், தன் அருகில் இருந்த அவசர காலக் கதவின் பிடியை அழுத்த அது திறந்து கொண்டது.
உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அந்த நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். தெரியாமல் இந்த தவறை செய்து விட்டதாக அவர் கூறினாலும், அதற்காக அவருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


0 Comments