(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தபால்
அலுவலகம்; பல ஆண்டு காலமாக பழமை வாய்ந்த கட்டிடத்தில் பௌதீக
வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதால் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகளை
வழங்க முடியாதுள்ளது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட
உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர்
அப்துல் ஹலீம் முகமட் ஹாஸீமின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அமைச்சர்
உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் மேற்கொண்ட துரித
நடவடிக்கையின் பயனாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய தபாலக கட்டிடம்,
சுற்றுமதில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அம்பரை
மாவட்ட செயலக பொறியலாளர் ஏ.எல்.ஏ.நாபீர் தiமையிலான குழுவினர் உரிய
இடத்திற்கு சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை தீவிராமாக மேற்கொண்டு
வருகின்றனர்.
இது தொடர்பாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார
அமைச்சின் செயலாளர் ஏ.எல்.அப்துல் மஜீதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்
பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில்
சந்தித்து கலந்துரையாடினார்.





0 Comments