கட்சிகள் அனைத்தினதும் அடுத்த நகர்வு பாராளுமன்றத் தேர்தலினை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது.நாட்டில் சில மாற்றங்களினைப் பார்க்கும் போது என்னடா நடக்கின்றது..??என்றே
நினைக்கத் தோன்றுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மு.கா இனை மையப்படுத்தி பொத்துவில்
தொகுதி சார்பாக மு.கா இன் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களும்,கல்முனைத் தொகுதி
சார்பாக மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களும்,சம்மாந்துறைத் தொகுதி சார்பாக
கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் அல்லது
சட்டத்தரணி முஸ்தபா ஆகியோரினையும் களமிறக்க மு.கா உயர் மட்டங்கள்
தீர்மானித்துள்ளதாக மு.கா நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.மு.கா இற்கு
கிடைக்கவுள்ள தேசியப் பட்டியல் தற்போதைய கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரிற்கும்
வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments