ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெறவுள்ள
சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
ஆலோசகர்களான முன்னள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும்
மகிந்த ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து
கொள்ளவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த
தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஒரே மேடையில் இணைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
இம்முறை சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பீ.டி. சிறிசேன மைதானம் அல்லது சீ.சீ.சீ மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டம் கெம்பல் மைதானத்தில் இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Comments