அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள வியூகமொன்றை
தயாரிப்பதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்
அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே நிதி அமைச்சுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.
அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள் காணரமாக அரசாங்க ஊழியர்களில் பல்வேறு தரங்களை சேர்ந்தவர்களுக்கு இடையில் பாரிய சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
புதிய சம்பள வியூகம் ஊடாக இந்த முரண்பாடுகள் நீங்குமென எதிர்பார்க்கப்படுவதோடு அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் சமமான சம்பள அதிகரிப்பு உரித்தாகும் வகையில் விதிமுறைகளை கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.
மேலும் அடுத்த மாத இறுதிக்குள் புதிய சம்பள வியூகத்திற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்வதுடன், தொழிற் சங்கங்களின் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் எண்ணியுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments