Subscribe Us

header ads

தேசிய இளைஞர் சேவை சபையின் 750 இலட்சம் ரூபா மாயம்



தேசிய இளைஞர் சேவை சபையின் 750 லட்ச ரூபா பணத்தை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
2014ம் ஆண்டு இளைஞர் சேவை சபையிலிருந்து 750 லட்சம் ரூபா பணம் மாயமாகியுள்ளது.
இந்தப் பணத்தைக் கொண்டு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்கள் காணப்படுகின்றன. எனினும் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளும் கிடையாது.
2014ம் ஆண்டுக்காக தேசிய இளைஞர் சேவை சபைக்காக 6000 லட்ச ரூபா ஒதுக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 1500 லட்ச ரூபா கடன் தொகையொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தைக் கொண்டு தேசிய இளைஞர் சேவைகள் சபை கடமைகளை செய்யவில்லை.
தேசிய இளைஞர் சேவைகள் சபையில் கடந்த பத்து ஆண்டுகளாக உள்ளக கணக்காய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஸ்ரீலங்கா யூத் என்ற பெயரில் சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சஞ்சிகை வேறும் ஓர் இடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக திரட்டப்பட்ட பணம், விளம்பர உதவிகள் பற்றிய தகவல்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்காக ஓர் நிகழ்ச்சியொன்று நடத்தி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அந்த பரிசுத் தொகைகள் வழங்கப்படவில்லை என தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments