Subscribe Us

header ads

கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக 18 ஆயிரத்து 500 தம்பதிகள்


கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக 18 ஆயிரத்து 500 தம்பதிகள் காத்து இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விவாகரத்து

இல்லற வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினரிடையே விவாகரத்து என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்றாக மாறிவருவது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒன்று.
முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருந்தது. தற்போது விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்றே சொல்லலாம். கேரளாவில் விவாகரத்து சற்று அதிகமாகி கொண்டு வருகிறது. இங்குள்ள சினிமா நடிகைகளில் பெரும்பாலானவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
18 ஆயிரத்து 500 தம்பதிகள்
கேரளாவை பொறுத்தவரை கணவன்-மனைவி இடையேயான குடும்ப பிரச்சினை மற்றும் விவாகரத்து பிரச்சினைகளை தீர்க்க 28 குடும்ப நல கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. இந்த கோர்ட்டுகளில் 18 ஆயிரத்து 500 தம்பதிகள் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து காத்து இருக்கிறார்கள்
கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டு ஒருவர் மனு செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்து ஐகோர்ட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எர்ணாகுளம் நகரில் மட்டும் ஆயிரத்து 739 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments