Subscribe Us

header ads

மத்தியமுகாம் நூலகத்திறப்பு விழாவும் விளையாட்டு உபகரணம் வழங்கும் வைபவம்

(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் நகரில் அமைந்துள்ள பொது நூலகத் திறப்பு விழா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கு நிகழ்வு நேற்று நாவிதன்வெளி  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மத்தியமுகாம் மத்திய குழு தலைவருமான  எம்.எச். அலியார் தலைமையில நடைபெற்றது.

இந்நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.ஏ.எஸ்.ஹமீட், அமைச்சர் றிஷாத் பதியுதீன்; அவர்களின்  இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி;; இளைஞர் அமைப்பாளருமான  சி.எம். ஹலீம் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளரும், மைஹொப் நிறுவன உரிமையாளருமான சித்தீக் நதீர், மத்தியமுகாம் சவளக்கடை மத்தியகுழு தலைவர் ஏ.பி.வகார்தீன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

இதன்போது மத்தியமுகாம் பிரதேச அல்-அஸாம் விளையாட்டுக்கழகம், சாம்பைக்கேணி-4 மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு விளையாட்டு உபகரணங்களையும், நூலகத்திற்கான  புத்தகங்களையும் மருதமுனை மற்றும் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் அமைப்பாளரும், மைஹொப் நிறுவன உரிமையாளருமான சித்தீக் நதீர்; அன்பளிப்புச் செய்தார்.




Post a Comment

0 Comments