Subscribe Us

header ads

நட்சத்திர வீரர் சங்ககராவின் தொடரும் சாதனைகள்! கூடுதல் ஓட்டங்கள் பெற்ற இரண்டாவது வீரர் சங்கா


இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்ககராவின் ஆட்டம் இன்று அதிரடியாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் (117 ரன்) அடித்து முத்திரை பதித்தார். கடந்த 26 திகதி பங்காளதேசத்துக்கு எதிராகவும் அவர் 105 ரன் எடுத்திருந்தார். இந்த உலக கோப்பையில் அவருக்கு இது 2–வது சத்தமாகும். ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டியில் 3–வது சதமாகும்.

401 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள சங்ககரா இன்று தனது 23–வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் அதிக சதம் அடித்த வீரர்களில் 4–வது இடத்தில் உள்ளார்.

ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் அனைத்திலும் கூடுதல் ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையிலும் சச்சின் டென்டுல்காருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையயைப் பெற்றுள்ளார்.
2000 – 2015 வரையான காலப்பகுதியில் மொத்தம் 587 போட்டிகளில் கலந்து கொண்டு 27546 மொத்த ஓட்டங்களைப் பெற்று அவர் இந்த நிலையை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments