Subscribe Us

header ads

Tb வேகத்தில் பறக்கும் தரவுகள்: 5G தொழில்நுட்பத்தில் சாதனை


தொலைபேசி வலையமைப்பில் தற்போது அதிவேகம் கொண்ட வலையமைப்பு வகையாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

இதன் வேகத்தையும் மிஞ்சும் வகையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முகமாக ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் Surrey பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5G ஆராய்ச்சி மையத்தில் Tbps வேகத்தில் தரவுகளை அனுப்பி புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தற்போது உள்ள தரவுப்பரிமாற்றத்தை விடவும் 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 5G தொழில்நுட்பம் 2018ம் ஆண்டளவில் பொதுமக்களின் பாவனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments