ஓர் உண்மைப் போராளியின் உள்ளக் குமுறல். உயர் பீடத்தின் காதுகளுக்கு எட்டுமா? புத்தளம் மாவட்டத்திலும் வடமேல் மாகாணத்திலும் பதியமிட்ட மரம் வேரூன்றித் தழைக்குமா? தலைக் கவிழுமா? என்ற கேள்விக் கணைகளுடன்...
* 1996 ம் ஆண்டு புத்தளம் நகர சபையில் ஆட்சி.
* 2004 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்துக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்று தந்தமை.
* 2005 மாகாண சபை தேர்தலில் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களை உடனடியாகவும், மர்ஹூம் ஹாபியின் மறைவின் பின் ஒரு உறுப்பினராகவும் மூன்று மாகாண சபை உறுப்பினர்களை பெற்றமை.
* எதிரணியில் இருந்து கொண்டு மாகாண சபை முதலமைச்சரோடு புத்தளம் உறுப்பினர்கள் மூவரையும், குருநாகல் உறுப்பினர்கள் இருவரையும் வைத்து பேரம் பேசியமை.( எஹியா, நியாஸ், ராதா கிருஷ்ணன், தஸ்லீம், ரிஸ்வி ஜவஹர்சா)
இப்படி கடந்து வந்த முஸ்லிம் காங்கிரஸ்... இன்று ???
* புத்தளம் நகர சபைக்கு ஒரு உறுப்பினர்.
* மாகாண சபைக்கு ஒரு உறுப்பினர்.
* அமைப்பாளர் யாரும் இல்லை, என்கின்ற அவல நிலைக்கு தள்ள பட்டதற்கான காரணம் யாது...?
இவை சம்பந்தமாய் முஸ்லிம் காங்கிரசில் உள்ள பலரோடு பல தடவைகள் பேசியும் எந்த பயனும் இல்லை.
2009 ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலுக்கு முன் கூட்டப்பட்ட மத்திய குழு இது வரையும் கூட்டப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் யாது??
இந்த இடைவெளியை இன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சரியாக பயன் படுத்துகிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது..
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாண்புமிகு. ரவூப் ஹகீம் அவர்களே...!
செயலாளர் மாண்பு மிகு ஹசன் அலி அவர்களே....!
தேசிய அமைப்பளர் மாண்பு மிகு சபீக் ரஜாப்தீன் அவர்களே....!
இது உங்கள் அனைவரின் கவனத்திற்கும்.
இப்படிக்கு.
முஸ்லிம் காங்கிரஸ் போராளி.
எம்.ஐ.எம்.இன்பாஸ்
நன்றி - The Puttalam Times -


0 Comments