-டீன் பைரோஸ்-
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதிகளைக் கொண்டு எம்மால் முடிந்த அளவு நாம் எமது மக்களுக்காக் பல்வோறு பட்ட அபிவிருத்திப் பணிகளை கடந்த காலங்களில் செய்ய கூடிய வாய்ப்புகளையும் வசதிகளையும் இறைவன் எமக்கு தந்தான் அல்ஹம்துலில்லாஹ். அதன் தொடர்தான் இன்று நாம் புதிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் ஆட்சியிலும் எமது அபிவிருத்தி பணிகளை தொடர்கின்றோம் இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
எங்களுக்கு யாரும் அரசில் சொல்லித்தர வேண்டிய அவசியம் கிடையாது அரசியல் தெரியாமல் எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை தடுத்து நிறுத்த முற்படும் முட்டால்களாக நீங்கள் இருக்க வேண்டாம் என முன்னால் பிரதி அமைச்சரும் இன்னால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
எமது மக்களுக்கான செய்ய வேண்டிய இன்னும் பல அபிவிருத்தி பணிகள் உள்ளன. அவற்றை செய்ய முற்படுங்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் நீங்கள் முடிந்தால் நிதிகளை கொண்டு வர முன்வாருங்கள். நீங்கள் நிதிகளை கொண்டு வந்தால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் நான கண்னை மூடிக் கொண்டு உங்களுக்கு கையோப்பம் இட்டத்தர தயாராக உள்ளேன் என்ற செய்தியையும் சொல்லிவைக்க விரும்புகின்றேன் என்றார்.
எமது மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்குமாக செய்ய வேண்டிய இன்னும் பல பணிகள் இருக்கின்றது அதனை செய்ய முன்வாருங்கள் அதனை விட்டுவிட்டு எம்மால் தொடக்கி வைத்த அபிவிருத்தி பணிகளை நீங்கள் செய்வதாக பொய் பிரச்சாரம் செய்வதும,; மக்களை பிழையான வழியில் திசை திருப்புகின்ற மிக மோசமான வேளைகளில் தயவு செய்து ஈடுபட வேண்டாம் எனவும் வேண்டிக் கொண்டார்.


0 Comments