Subscribe Us

header ads

தந்தை துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!(PHOTOS)


பொகவந்தலாவ நகரத்திலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் 10 வயது மதிக்கதக்க பாடசாலை மாணவி வீட்டில் உள்ள உறவினர்களுக்கு தெரியாமல் இன்று பிற்பகல் பஸ்ஸில்; சென்ற போது குறித்த பஸ் சாரதியும் நடத்துனரும் சந்தேகப்பட்டு இந்த மாணவியை நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின் நோர்வூட் பொலிஸார் விசாரணை செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணையின் போது குறித்த சிறுமியிடம் 50 ரூபாய் இருந்ததாகவும், தனது தந்தை மதுபானம் அருந்திவிட்டு தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாகவும் இதனால் மனவேதனையடைந்து வீட்டில் இருந்து வெளியே செல்ல முற்பட்டதாகவும்  சிறுமி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments