Subscribe Us

header ads

கற்பிட்டி சுற்று நீதிமன்றம் நீதி அமைச்சரால் திறந்து வைப்பு (photos)

கற்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்று நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (16/02/2015) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான‌ ரவூப் ஹக்கீம், எரிசக்தி மற்றும் மின்வலு இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நீதிமன்றம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாசின் வேண்டுமகோளுக்கினங்க அமைச்சர் ஹக்கீமின் கற்பிட்டி மக்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதிக்கமைய நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து ஆரம்ப பாடசாலையை வேறாக்கிய பின்னர் ஏற்பட்டுள்ள சிக்கலகளுக்கும், பாதிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு கல்வி அமைச்சரிடம் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலதிக இணைப்பு...
முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச் சட்டத்தை புதிய நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்இ நகர அபிவிருத்தி நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன்இ பிரஸ்தாப முஸ்லிம் விவாகஇ விவாகரத்து திருத்தச் சட்டம் தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் தயாரித்து முடித்திருப்பதாலும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு எம்.எச்.எம்.ஹலீம் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதாலும் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுவது விரைவில் சாத்தியமாகுமென்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.

கற்பிட்டியில் அமைச்சர் ஹக்கீமின் முயற்சியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா நீதிமன்ற கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் திங்கள்;கிழமை (16) அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனை தெரிவித்தார்.

கற்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலா நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை (16) முற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷஇ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்இ நகர அபிவிருத்தி நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்இ எரிசக்திஇ மின்வலு இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரஇ வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்இ நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வாஇ நீதிபதிகள்இ புத்தளம் சட்டத்தரணி சங்கத் தலைவர் முஹம்மது இக்பால் மற்றும் சட்டத்தரணிகள்இ பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது.

நானும் புதிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் நெருங்கி நண்பர்கள் நாம் இருவரும் ஒரே நாளிலேயே உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோம். சிறந்த இளம் அரசியல்வாதிக்கான விருதை நானும் சிறந்த இளம் சட்டத்தரணிக்கான விருதை விஜயதாச ராஜபக்ஷவும் முன்னர் ஒரே நாளிலேயே பெற்றுக் கொண்டோம்.

நீதியமைச்சராக இருந்த பொழுது பாராளுமன்றத்தில் நான் பேச எழும்பொழுது காரசாரமாக விமர்சிப்பவராகவும் அவர் இருந்தார்.

சிவில் சட்டக்கொவையில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகளை புதிய நீதியமைச்சர் முடித்து வைப்பார் என்று நம்புகிறேன்.அதனூடாக சட்டத்துறையில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படும். வழக்குகள் தாமதமாவதை நிவர்த்திப்பதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கிறேன்.

நான் நீதியமைச்சராக பதவியேற்ற பின்னர் கற்பிட்டிக்கு வந்தபோதுஇ இந்த சுற்றுலா நீதிமன்றம் அங்குள்ள விகாரையொன்றில் இயங்கியதைக் கண்டேன். மூன்று வடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த முயற்சி இப்பொழுது நிறைவேறியிருக்கிறது. நான் நீதியமைச்சராக பதவிக்காலத்திலேயே நேர அவகாசமின்மையால் நான் அடிக்கல் நட்டிய இந்த நீதியமன்றத்தை என்னால் திறந்து வைக்க முடியாமல் போயிவிட்டது. தூரவுள்ள தீவுப் பிரதேசங்களிலிருந்தும் இங்கு வழங்காளிகள் சிரமங்களுக்கு மத்தியில் வந்து போகும் நிலைமையை நான் அவதானித்தேன்.

இப்பொழுது கற்பிட்டியையும். சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த மக்களின் முக்கிய பிரச்சினை ஒன்று தீர்ந்து விட்டது. இதனை நிரந்தர நீதவான் நீதிமன்றமாக தரமுயர்த்துவதற்கு மூன்று பொலிஸ் அதிகார எல்லைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தது நம்பிக்கையூட்டுகிறது என்றார்.

கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து ஆரம்ப பாடசாலையை வேறாக்கிய பின்னர் ஏற்பட்டுள்ள சிக்கலகளுக்கும்இ பாதிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு கல்வி அமைச்சரிடம் கலந்துரையாடவுள்ளேன் என்றார்.

நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உரையாற்றும் பொழுது இந்த நாட்டில் கடந்த ஆட்சிகாலத்தில் சட்டமும் நீதியும் குழிதோன்டி புதைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நீதவானின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது. நீதவானின் பெயரைக் கேட்ட உடனையே வழக்காளி தனது தலைவிதி என்னவாகப் போகின்றதோ என்று அஞ்ச வேண்டிய நிலைமை இருந்தது. நான் கோப் என்ற பாராளுமன்ற குழுவிலும் அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற கணக்குக் குழுவிலும் தலைவர்களாக இருந்தபொழுது பாரிய நிதி மோசடிகளை கண்டு பிடித்தோம். அமைச்சர் ஹக்கீம் 400 கோடி ரூபா வேட் வரி மோசடி போன்றவற்றை கண்டு பிடித்து அம்பலப்படுத்தினார். உடனே எங்களை அகற்றுவதற்காக பாராளுமன்றம் இரண்டு வாரங்களுக்கு பின்போடப்பட்ட அநியாயம் நிகழ்ந்தது என்றார்.









டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்..

Post a Comment

0 Comments