பாரிசின் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அழகான ஆண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெகு விரைவாக பரவி வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சுரங்கபாதை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஆண்களில் அவ்வப்போது சில அழகான ஆண்களும் தென்படுவது வழக்கம்.
இதனை நபர் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து அந்நபர் கூறுகையில், முன்பே இதுபோல் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்த நான் பல புகைப்படங்களை வெளியிட்டேன் என்றும் தற்போது புதிய கணக்கை தொடங்கி புகைப்படங்களை பரப்புவது மகிழ்ச்சியை தருகிறது எனவும் கூறியுள்ளார்
.
சுமார் 8,000 ரசிகர்களை கொண்ட இவரது இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருப்பது பலரும் பெண்கள் என கூறப்படுகிறது.

0 Comments