Subscribe Us

header ads

செவ்வாய் கிரகத்தில் சூப்பரான செல்ஃபி: இது நாசாவின் கியூரியாசிட்டி


செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘மவுண்ட் ஷார்ப்’ பள்ளத்தில் மோஜோவி பகுதியில், இருந்து விண்கலம் செவ்வாய்கிரகத்துடன் சேர்த்து தனது செல்ஃபி படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.

இந்த பகுதியில் கியூரியாசிட்டி விண்கலம் 5 மாதம் வேலையில் ஈடுபடும். ‘மவுண்ட் ஷார்ப்’ 3 மைல் உயரமானது.

இதன் கீழ் பக்கவாட்டுப்பகுதி பல நூறு பாறை அடுக்குகளைக் கொண்டதாகும்.

பல செல்பி படங்களை கியூரியாசிட்டி எடுத்து அனுப்பி உள்ளது. இது குறித்து கலிபோர்னியாவை சேர்ந்த ரோவர் குழு உறுப்பினர் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தை சேர்ந்த காத்ரின் ஸ்டேக் கூறியதாவது, முந்தைய படங்களுடன் தற்போதைய செல்ஃபி படங்களை ஒப்பிட்டோம்.

இந்த படங்களின் பல பிரேம்களை நாங்கள் இணைத்தோம். இப்போது மலைகளின் பின்னணியில் விண்கலத்தை பார்க்க முடிந்தது என கூறியுள்ளார்.

இப்போது மோஜோவ் 2 என்ற இடத்தில் விண்கலம் 2-வது துளைபோடும் பணியை தொடங்கி உள்ளது. இந்த மண் மாதிரி எடுத்து பூமியில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.



Post a Comment

0 Comments