உளுக்காப்பள்ளம் ஹூஸைனியாபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள இல்மிய்யா அரபிக் கல்லூரியில் ஹிப்ழு கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான அல்ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடத் திறப்பு விழா என்பன இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. கல்லூரி ஆலோசகரும் ஹிதாயத்நகர் முஸ்லிம் வித்தியாலய அதிபருமான எம். எம். உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வர்த்தகக் கைத்தொழில் துறை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் சிறப்பு பேச்சாளராக முன்னாள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் எச். எம். நாசர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இன்றைய மூன்றாவது அல்ஹாபிழ் பட்டமளிப்பு விழாவின் போது 18 மாணவர்கள் அல்ஹாபிழ் பட்டம் பெற்றுக் கொண்டார்கள். இம்மாணவர்களுக்கான பட்டம் வழங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளை அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளினால் மாணவர்களுக்கு பட்டமளிப்பு மேற்கொள்ளப்பட்டது.
உளுக்காப்பள்ளம் ஹூஸைனியாபுரம் மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப் பள்ளியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஃமூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம். பி. ஜனாப் உட்பட அரபிக் கல்லூரிகளின் அதிபர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டதோடனர்.




0 Comments