Subscribe Us

header ads

பேர்ல்ஸ் மற்றும் புத்தளத்தின் ட்ரிப்ள் செவென் அணிகளுக்கிடையிலான போட்டி நாளை அல் அக்ஸாவில்




கற்பிட்டி நகரின் முதன்மை உதைபந்தாட்ட அணியான பேர்ல்ஸ் கால்ப்பந்தாட்ட அணி, புத்தளத்தின் ட்ரிப்ள் செவென் அணியுடன்  தனது இரண்டாவது போட்டியை நாளை தனது சொந்த மண்ணில் எதிகொள்ள உள்ளது.


இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்டதொடரின் 126வது ஆட்டதிலேயே இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ள உள்ளன.

இந்த பரபரப்பான ஆட்டம் நாளை மாலை (வெள்ளிக்கிழமை பி.ப 3:30) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்டதொடரின் போட்டி ஒன்று கற்பிட்டியில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 

உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கும் இந்த போட்டியில் எமது மண்ணின் மைந்தர்களின் வெற்றிகளுக்கு உங்கள் பங்களிப்பை, ஆதவை வழங்க போட்டி இடத்துக்கு வருமாறு அன்புடன அழைக்கிறோம். 

பேர்ல்ஸ் கால்ப்பந்தாட்ட அணியின் வெற்றிக்கு எமது கற்பிட்டியின் குரல் சார்பாக வாழ்த்துகள்




Post a Comment

0 Comments