இஸ்லாத்தை இழிவுபடுத்த முயலும் கிருத்தவ போதகருக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் போராட்டம் அறிவிப்பு.
உலக மக்களுக்கு நேர்வழிகாட்டியாக இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும், திருமறைக் குர்ஆனையும் இழிவுபடுத்தும் விதமாக பேசி வரும் தமிழக IAS அதிகாரி உமா சங்கர் என்பவரை பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) அமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
IAS அதிகாரியாக கடமையாற்றும் உமா சங்கர் என்பவர் இஸ்லாத்தினை இழிவு படுத்தியும், குர்ஆனை அவமதித்தும் பல இடங்களில் உரையாற்றி வந்துள்ளதுடன், “இறந்தவர்களை தன்னால் உயிர்பிக்க முடியும் என்றும்” பலவிதமான அற்புத சக்திகள் தனக்கு இருப்பதாகவும் கூறி அப்பாவிப் பொது மக்களை ஏமாற்றியும் வருகின்றார்.
இது தொடர்பில் ஏற்கனவே பகிரங்க விவாத அறைகூவல் ஒன்றை தவ்ஹீத் ஜமாத் விடுத்திருந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.
உமா சங்கர் அவர்களை உடனடி பணி நீக்கம் செய்து, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 10.02.2015 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகிப்பர் என TNTJ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*-SLTJ ஊடகப் பிரிவு-*


0 Comments