Subscribe Us

header ads

ஜோர்டானின் பைலட்டையும் கொலை செய்தது ISIS!:இடைவிடாத யுத்தத்துக்கு மன்னர் சபதம்!


சமீபத்தில் ISIS இயக்கத்தினர் கைப்பற்றி இருந்த ஜோர்டானின் பைலட்டான அல் கசாபெஹ் ஐயும் நேற்று செவ்வாய்க்கிழமை ISIS எரித்துக் கொலை செய்ததற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டிருந்ததை அடுத்து ஜோர்டான் அரசு அதிரடியாகத் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இரு ஜிஹாதிஸ்ட்டுக்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மேலும் ஜோர்டானின் அரசர் அப்துல்லா ISIS இன் இக்கொடூர செயல்களுக்குப் பதிலடியக இனிமேல் தாம் அவ்வியக்கத்தின் மீது இடைவிடாத யுத்தத்தினை மேற்கொள்வோம் எனவும் சூளுரைத்துள்ளார். மேலும் முன்னர் அல் கசாபெஹ் ஐ விடுவிக்க வேண்டுமென்றால் ஜோர்டான் அரசு தமது சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த அல் ரிஷாவி என்ற பெண் தீவிரவாதியை குறித்த காலக் கெடுவுக்குள் விடுவிக்க வேண்டும் என ISIS நிபந்தனை விதித்திருந்தது. இந்நிலையில் ஜோர்டான் பைலட் எரித்துக் கொல்லப் பட்ட பின்னர் அதற்குப் பழி வாங்கும் முகமாக ஜோர்டான் தூக்கிலிட்ட இரு ஜிஹாதிக்களில் சஜிதா அல் ரிஷாவியும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய ஜிஹாதி அல்-கொய்தா கமாண்டர் ஜியாத் கார்போலி என அடையாளப் படுத்தப் பட்டுள்ளார்.

ISIS அச்சுறுத்தல் அதிகம் உள்ள சிரியாவுக்கு அண்மை நாடான ஜோர்டான் சிரியா மற்றும்  ஈராக்கில் குண்டு மழை பொழிந்து வரும் அமெரிக்கக் கூட்டுப் படையில் அங்கம் வகிக்கும் நாடாகும். இவ்வாறான வான் தாக்குதலை தொடுக்கும் ஒரு சமயத்தில் தான் டிசம்பரில் வடகிழக்கு சிரியாவில் ஜோர்டானின் F-16 என்ற யுத்த விமானம் விபத்துக்குள்ளாகி அதை ஓட்டிய அல் கசாபெஹ் ISIS ஆல் கைப்பற்றப் பட்டிருந்தார். மேலும் அரசின் கடும் முயற்சிக்குப் பின்னரும் ISIS ஆல் கைப்பற்றப் பட்ட தமது நாட்டு பைலட் உயிர் தப்பவில்லை என்ற செய்தியை அறிந்த ஜோர்டானிய மன்னர் அப்துல்லா தன் அமெரிக்கப் பயணத்தை குறைத்துக் கொன்டு உடனே தற்போது தாய்நாடு திரும்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments