விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் ஜிஹாதீ உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது.
ஜோர்டான் விமானி
இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் அரபு நாடான ஜோர்டானும் இணைந்து களமிறங்கி உள்ளது.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது, கடந்த டிசம்பர் மாதம், ஜோர்டான் போர் விமானி லெப்டினன்ட் மூவாத் அல் கசாஸ்பே (வயது 26) என்பவர் ஓட்டிச்சென்ற எப்-16 ரக போர் விமானம், ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விபத்தில் சிக்கியது.
இதையடுத்து அவரை ஐ.எஸ். அமைப்புகள் பணயக் கைதியாக பிடித்துச் சென்றனர்.
உயிரோடு எரித்துக்கொலை
மூவாத் அல் கசாஸ்பேயை விடுவிக்க ஜோர்டான் அரசு கடந்த ஒரு வாரமாக தீவிரமாக முயற்சி செய்தது.
அப்போது ஜோர்டானின் பிடியில் இருந்த பெண் ஜிஹாதீ சஜிதாஅல் ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரினர். இதை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும், தங்களது போர் விமானியை உயிரோடு வைத்திருப்பதை நிரூபிக்கும் சான்று வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புககளிடம் ஜோர்டான் கோரியது. ஆனால் ஐ.ஸ் அப்படி ஏதும் தரவில்லை.
இந்த நிலையில், ஜோர்டான் போர் விமானி மூவாத் அல் கசாஸ்பேயை ஐ.ஸ் ஈவிரக்கமின்றி ஒரு உலோகக் கூண்டில் அடைத்து வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இந்த படுகொலைச் சம்பவம், கடந்த மாதம் 3-ந் தேதியே அரங்கேறி விட்டதாக தெரிகிறது. எனினும், இது தொடர்பாக இப்போது வெளியான வீடியோ, ஜோர்டானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. போராட்டங்களுக்கும் வழிவகுத்தது.
ஒபாமா கண்டனம்
இந்த படுகொலைக்கு அமெரிக்கா, ஜப்பான், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அத்துடன் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். அதில், ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான யுத்தத்தை எந்த நிலையிலும் விட்டு விடக்கூடாது என முடிவு செய்தனர்.
பழிக்கு பழி
இதையடுத்து ஐ.எஸ். விடுவிக்கக்கோரிய பெண் சஜிதாஅல் ரிஷாவியும், மற்றொரு பெண் ஜைத் அல் கர்போலியும், ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள சவாகா சிறையில் நேற்று அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே தூக்கில் போடப்பட்டனர்.
இதன்மூலம் தனது விமானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஜோர்டான் பழி தீர்த்தது. தூக்கில் போடப்பட்ட சஜிதாஅல் ரிஷாவி, ஜைத் அல் கர்போலி ஆகியோரது உடல்களை 2 ஆம்புலன்சுகள், தகுந்த பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியே எடுத்து சென்றன.
யார் இந்த ஐ.ஸ்?
சஜிதாஅல் ரிஷாவிக்கு அம்மானில் 2005-ம் ஆண்டு 60 பேர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றொரு பெண் ஜைத் அல் கர்போலிக்கு, 2008-ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள ஜோர்டான் மக்களை கொல்ல சதி செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது


0 Comments