Subscribe Us

அனுபவ வீரர்கள் அசத்துவார்களா?



டப்பு உலகக் கோப்பை போட்டியிலேயே சீனியர் வீரர்களான மகில ஜெயவர்த்தனே (இலங்கை), சாகித் அப்ரிடி (பாகிஸ்தான்), டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) ஆகியோர் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது. இவர்கள் அனைவருக்கும் இது 5-வது உலகக் கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பை போட்டியில், நீண்ட அனுபவம் கொண்ட சில சீனியர் வீரர்கள் விளையாடவில்லை. சில சீனியர்களுக்கோ அணிகளில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால் ஜெயவர்த்தனே, அப்ரிடி, வெட்டோரி ஆகிய மூவரும் 1999, 2003, 2007, 2011 உலகக் கோப்பை போட்டித் தொடர்களில் பங்கேற்றதோடு, நடப்பு போட்டியிலும் கள மிறங்கியிருக்கின்றனர். 

இதற்கு முன், இம்ரான்கான், வாசிம் அக்ரம், இன்சமாம் (பாகிஸ்தான்), ரணதுங்கா, அரவிந்த டிசில்வா, ஜெயசூரியா, முரளீதரன் (இலங்கை), லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பான்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டீவ் டிகாலோ, தாமஸ் ஒடோயா (ஜிம்பாப்வே) ஆகியோரும் 5 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருந்தனர்.
இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் (1992, 1996, 1999, 2003, 2007 2011), பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவித் மியாண்டட் (1975, 1979, 1983, 1987, 1992, 1996) ஆகிய இருவரும்தான் அதிகபட்சமாக 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய சாதனைக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். 

வெட்டோரி 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தாலும் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

Post a Comment

0 Comments