முசலி தேசிய பாடசாலையில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது தொகுதியினர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இம்மாணவர்களுக்கு பாடசாலையினால் முறையாக வகுப்புகள் ஒழுங்கு செய்து கொடுக்கப்படாததும் இவர்களைக் கொண்டு முசலியிலுள்ள டியுடரி அவசர அவசரமாக சில இலட்சங்களைச் சுருட்டிக் கொண்டதும் தனிக்கதை. இதுகுறித்த பதிவு வேறொரு தடவை வரும்.
எனினும் முசலியில் விஞ்ஞான பிரிவின் ஆரம்பத்தை நாம் மதிக்க வேண்டும். இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
ஆனால் மன்னார் மாவட்டத்திற்கு 5 இடங்களே மருத்துவப் பிரிவுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதனை இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் கம்பஹா, கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள பிள்ளைகளை பல்லாயிரக்கணக்கான ரூபா லஞ்சம் வாங்கிக் கொண்டு முசலி பாடசாலையில் பதிவு செய்து இந்த 5 இடங்களையும் தாரை வார்க்கும் காரியத்தில் முசலி பாடசாலை அதிபர் அகுபார் ஈடுபட்டுள்ளார். இது இவரது பாடசாலையில் கல்வி கற்கும் முசலிப் பிரதேச மாணவர்களுக்கும் சேர்த்து செய்யும் மாபெரும் துரோகமில்லையா? இதனை தட்டிக் கேட்பார் இல்லையா?
இந்த விடயத்தை அதிபர் அல்லது வலயக் கல்விப் பணிமனை நிராகரிக்குமானால் பாடசாலை ஆவணங்களைக் கொண்டு இது நிரூபிக்கப்படும்.
Mohamed Khan
Mohamed Khan


0 Comments