Subscribe Us

சிலாபத்துறை பகுதியில் அமைந்துள்ள பெண்களுக்கான கிராமோதய ஆரம்ப சுகாதார நிலையத்தை சிலாபத்துறை பொலிஸாரிடமிருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை.


மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பகுதியில் அமைந்துள்ள பெண்களுக்கான கிராமோதய ஆரம்ப சுகாதார நிலையத்தை சிலாபத்துறை பொலிஸாரிடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரி சிலாபத்துறை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் சிலாபத்துறை முஹைதீன் ஜீம்ஆ மஸ்;ஜித் நிர்வாகம் ஆகியோர் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கிராமத்தைச் சுற்றி சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த குடும்பங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்காக ஏற்கனவே கிராமோதைய ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று சிலாபத்துறையில் நீண்டகாலமாக இயங்கி வந்தது.

-குறித்த நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிகிச்சைகளும்,குழந்தைகளுக்கான போசாக்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்தது.

ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின் குறித்த நிலையம் சிலாபத்துறை பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளமையினால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சிகிச்சைகளும்,குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து வழங்குதல் என்பன தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-இதனால் இப்பகுதியில் உள்ள தாய்மார்கள் மேற்படி நிகழ்வுகளுக்காக மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் அம்மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

போக்கு வரத்து வசதிகள் மிகவும் குறைவாக உள்ள இப்பகுதியில் தூர இடங்களுக்கு மக்கள் முச்சக்கர வண்டியிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

-வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற இம்மக்கள் அந்தச் சுமையை சுமக்க முடியாமல் தொடர்ச்சியாக சிகிச்சைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

இதனால் இப்பகுதியில் ஒரு சில இறப்புச்சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

-எனவே இக்கிராம மக்களின் நலனையும்,அவர்கள் எதிர்; நோக்கும் பிரச்;சினைகளையும் கருத்தில் கொண்டு சிலாபத்துறை   கிராமோதய ஆரம்ப சுகாதார நிலையத்தை சிலாபத்துறை பொலிஸாரிடமிருந்து மீட்டுத்தருமாறு  கேட்டுக்கொள்ளுகின்றோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-Munas Arafath Cassim-

Post a Comment

0 Comments