Subscribe Us

header ads

எனக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியாது, கண்ணீர் விட்ட போப் பிரான்சிஸ்


கிறிஸ்தவ மக்களிடையே இயேசு கிறிஸ்துவின் கருத்துகளை போதனை செய்வது மட்டுமே எனக்கு தெரியும். இன்றுவரை கம்ப்யூட்டரில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று தெரியாது என்று வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் கூறினார்.கலை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் நேற்று வாடிகன் நகரில் 78 வயதான போப் பிரான்சிஸை சந்தித்து உரையாடினார்கள்.அப்போது ஸ்பெயினை சேர்ந்த அலிசியா என்ற 16 வயது சிறுமி, கூகுள் இணையதளத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியமா என்று போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்டாள்.

நான் ஒரு உண்மையை உங்களுக்கு சொல்லட்டுமா? உலக மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரசாரம் செய்ய மட்டுமே தெரியும். கம்ப்யூட்டரை இயக்கத் தெரியாது. அதை கற்றுக்கொள்ள எனக்கு நேரமும் அமையவில்லை என்று போப் பிரான்சிஸ் மனம் திறந்து கூறினார்.உடனே அந்த ஊனமுற்ற குழந்தைகள், கண் தெரியாதவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி முறை, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், டேப்லட் மற்றும் வீடியோ விளையாட்டுகளை எவ்வாறு இயக்குவது என்று போப் பிரான்சிஸுக்கு சொல்லி கொடுத்தனர். இதை கண்டு போப் பிரான்சிஸ் மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.

Post a Comment

0 Comments