Subscribe Us

header ads

அ.இ.ம.கா இனை இரு கரம் கூப்பி அழைக்கும் மு.கா..??


வன்னியில் உதயமாகி இன்னும் ஓரிரு மாதங்களில் அம்பாறை மாவட்டத்தில் தனது முதல் காலடியை வைக்கப் போகும் அ.இ.ம.கா இற்கு மு.கா இனுள் தோற்றம் பெற்றுள்ள முதலமைச்சர் பிரச்சனை நல்லா சகுனமாக அமைந்துள்ளது.மு.கா இனது அம்பாறை இருப்பினை தக்க வைத்து வந்ததில் கல்முனைத் தொகுதி முக்கிய பங்காற்றி வந்தது யாவரும் அறிவர்.அதில் அதிகம் முஸ்லிம்களைக் கொண்ட ஊரான சாய்ந்தமருதின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது.

எது சரியோ..?? எது பிழையோ..??  என்பதனைப் பார்க்கும் நேரம் இதுவல்ல.ஊசி ஓட்ட இடம் கொடுத்தால் போதும் அதில் உலக்கையினை ஓட்டி உலகினை ஆண்டு விடுவார் அமைச்சர் ரிஷாத் பதியூர்தீன்.அவருக்கு தற்போது தேவையானது ஒரு சிறு ஓட்டை தான் ஆனால்,முஸ்லிம் காங்கிரசோ அழகான தற்போது மிகப் பெரிய ஓட்டையினை போட்டுக் கொடுத்துள்ளது.தட்டிக் கேட்க ஆள் இல்லாத ஒரு  நிலை இருந்ததால் அடித்தாலும் பட்டுக் கொண்டு மக்கள் மு.கா இனை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.எதிர்த்தாலும் தே.கா உடன் இணைய வேண்டும் மு.கா  எதிர்க்க என்ன காரணமோ அதனை தே.கா ஒரு படி மேல் சென்று செய்து கொண்டிருந்ததால் மு.கா உடன் மேலும் மேலும் மக்கள் பிணைக்கப்பட்டார்கள்.

இப்போது புதிய அரசியல் தலைமை வரும் போது மக்கள் ஒரு விதமான மன மாற்றம் அடைவார்கள் என்பதனை மறுப்பதற்கு இல்லை.ஏற்கனவே,சிராஸ் மீராசாகிப் சிறு தொகை வாக்குகளினை பிரித்து விட்டார்.அதற்குள் ஏ.எம் ஜெமீலும் பிரித்தால் சாய்ந்தமருதில் குறித்தளவான  வாக்குகள் பிரியப் போவது என்னவோ நிச்சயப்படுத்தப் பட்டு விட்டது .சாய்ந்தமருதில் இருந்த இரு தலைகளும் கழன்று சென்றால் மு.கா பிரதித் தலைவர் முழக்கம் மஜீத் உள் நுழைவார்.அங்கு வேறு சொல்லிக் கொள்ள யாரும் இல்லை என்பது யாவரும் அறிவர்.இவர் கடந்த மாநகர சபையில் பெற்றுக் கொண்ட வாக்குகளை வைத்துப் பார்த்தால் அவர் மக்களிடையே அ=எந்தளவு உள்ளார் என்பதனை அறிந்து கொள்ளலாம்.இவ்வாரானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு அரசியல் வண்டி ஓட்டுவது? சரி இன்னுமொருவர் சாம்ராஜ்ஜியத்தினை மு.கா நிலை நாட்டுவது என்றாலும் அது அடி மட்டத்திலிருந்து உருவாக்கப் பட வேண்டி இருப்பதால் மீண்டும் கோட்டையினை மீளக் கட்டமைப்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.எனவே,மு.கா இதன் மூலம் அடையப் போகும் தாக்கத்தை சாதாரணமாக மட்டிட்டுக் கொள்ள முடியாது என்பது மாத்திரம் இப்போது கூறிக் கொள்ளலாம்.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

இலங்கை.

Post a Comment

0 Comments