Subscribe Us

header ads

வெலே சுதாவிடம் கடன் பெற்ற துமிந்த சில்வா


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பாரிய போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவிடம் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினரிடம் வெலே சுதா அளித்த வாக்கு மூலத்தில் இந்தக் கடன் விவகாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நிதி பரிமாறிக் கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வெலோ சுதா, அவரது மனைவி மற்றும் துமிந்த சில்வா ஆகியோரின் ஐந்து வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

துமிந்த சில்வா போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் மற்றுமொரு போதைப்பொருள் வர்த்தகரான லலீத்ய கௌல்சயாவிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்ற விசாரணைப் பிரிவினர், கொழும்பு நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் தெரிவித்துள்ளனர்.

வெலே சுதா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட கிம்புல எலே குணா எனப்படும் குணசீலன் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவருடன் வெலே சுதா தொடர்புகளைப் பேணியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments