சுவிசை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகின் பல நாடுகளை சைக்களிலேயே கடந்து வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசை சேர்ந்த மானுவெல் மெய்யர்(Manuel Meier Age-21) என்ற வாலிபர், சமீபத்தில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து அலாஸ்காவுக்கு சுமார் 82 நாட்களில் பயணித்துள்ளார்.
இதற்கு முன்பு இவர் ஆசியாவின் தென்கிழக்கு நாடுகளான கம்போடியா, லயோஸ், வியாட்நாம் மற்றும் கனடா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணித்துள்ளார்.
இந்நிலையில் இவர் செல்லும் பாதைகள் சில நேரங்களில் பாறைகள் நிறைந்ததாகவும், கல்லும் முள்ளும் அதிகம் நிரம்பியதாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அதனை பொருட்படுத்தாது இந்த வாலிபர் தன் பயணத்தை தொடந்து கொண்டே இருந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இதுபோன்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்டு உலகை சுற்ற மிகவும் ஆசை என்றும் அதனால் நான் சோதனைகளை பெரிதாக எடுத்து கொள்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.



0 Comments