Subscribe Us

header ads

இலங்கை தேசிய கொடியை அவமதிப்பு செய்த அமெரிக்க இணையதளம்


லங்கையில் 67 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பான கடிதம் ஒன்றும் அதனுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பதவியில் இருந்து நீக்குவதற்கு இலங்கையர்கள் செயற்படுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு தலைமை தாங்கியவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எனவும் அதன் பின்னர் தனது சகோதரர்களுடன் இணைந்து சர்வாதிகாரமான ஆட்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்க்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சகல மத குருமார்களின் ஆதரவு மற்றும் பாரம்பரிய உரிமைகளை உறுதி செய்துள்ளதாக ஜனாபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் இலங்கையின் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான சரியான சந்தர்ப்பம் இது என அமெரிக்க   ராஜங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments