Subscribe Us

header ads

மதுரங்குளி வயோதிபரின் பரிதாபம் நிலை...

-MOHAMMED HANIFA Niflan -
IMG_20150218_191047
இன்று மிஹிந்தலை ஜும்ஆ பள்ளிவாசலில் ஒரு வயோதிபரை காணக்கிடைத்தது. 55அல்லது  60 வயது மதிக்கத்தக்க அந்த வயோதிபர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். வலப்பக்கம் செயற்கை கால் பொருத்தப்பட்டும், இடது பக்க காலில் நீரிழிவு நோயினால் ஏற்படும் புண்களுடனும் காணப்பட்டது. அருகில் சென்று அவரைப்பற்றி விசாரித்தபோது, மதுரங்குளியை சேர்ந்த சல்மான் என தெரிய வந்தது.
அவருடைய பலவீனம் காரணமாக அவரிடம் இருந்து வேறெந்த தகவல்களையும் அறிய முடியவில்லை. அவ்வயோதிபரை அவதானிக்கையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் இங்கு வந்திருக்கலாம் அல்லது தன்னுடைய நிலையை கருதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என ஊகிக்க கூடியதாக  இருந்தது.
அவருடைய உடல்நிலையை கருத்திற்கொண்டு மிஹிந்தலை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்  சபையினர் அவரை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இவரைப்றிய தகவல் அறிய 072- 5220482 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

நன்றி:Puttalamonline

Post a Comment

0 Comments