இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜனாமாச் செய்யவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று சற்று முன்னர் அறிவித்தது.
தற்போதைய அரசுடன் எந்தவிதமான மனக் கசப்புக்களும் இல்லையெனவும், தான் சட்டத்தரணியாகவிருந்து நீதிமன்ற நடவடிக்கைகளை கொண்டு செல்வதில் உள்ள தடைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறித்த சிங்கள செய்திச் சேவைக்கு அறிவித்துள்ளதாகவும் அச் சேவை குறிப்பிட்டது.
தொடர்ந்தும் தற்போதைய அரசாங்கத்துக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளதாகவும் அச்சேவை மேலும் அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மைத்திரி அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது


0 Comments