Subscribe Us

header ads

புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடும் மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றின் கீழ் சில அரசியல் கட்சிகள் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ.குணசேகர ஆகிய கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக மஹிந்தவை களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டத்திற்கு இதுவரையில் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் எதனையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
இதேவேளை, மற்றுமொரு தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோரை இணைத்து சுதந்திரக் கட்சி பிளவடைவதனை தடுக்க கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments