Subscribe Us

header ads

“அதிமேதகு” என்ற வசனம் எனது பெயருக்கு முன்னால் வேண்டாம் – ஜனாதிபதி மைத்திரி

“அதிமேதகு” என்ற சொல்லை இன்று முதல் தனது பெயருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதற் பிரஜையுடன் முதலாவது உரையாடல் எனும் தலைப்பில் தற்பொழுது அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது;
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி என இதுவரை காலமும் ஊடகங்கள் உட்பட அரச சேவைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இன்று முதல் எனது பெயருக்கு முன்னால் “அதிமேதகு” என்ற சொல்லை உபயோகிக்க வேண்டாம் “இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி” என உபயோகித்தால் போதுமானது.
அதேபோன்று எனது மனைவிக்கும் ” ஜனாதிபதியின் மனைவி” என அழைத்தால் போதுமானது, முதற் பெண்மணி என அழைக்கவேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தெரிவித்தார். 

Post a Comment

0 Comments