பாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து விசாரணை செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்ககள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும். ஏற்கனவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வெலே சுதாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 75 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, துமிந்த சில்வா கைது செய்யப்படாமைக்கு ஆளும் கட்சியின் ஒரு தரப்பினரும் ஜே.வி.பியும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், துமிந்த சில்வாவைக் கைது செய்யக்கூடாது என புதிய அரசின் சில முக்கியஸ்தர்கள் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


0 Comments