Subscribe Us

header ads

முன்னாள் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சட்ட ரீதியில் வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் இழக்கப்பட நேரிடுமென சட்டத்துறை வட்டாரங்களை ஆதாரம் காட்டி அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான இரவன்று அலரிமாளிகை இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பதாக எவ்விதத்திலாவது உறுதிப்படுத்தப்பட்டால் இவ்வாறு வரப்பிரசாதங்களை இழக்க நேரிடுவார் எனவும் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments