Subscribe Us

header ads

அரசியல் வியாபாரிகள் ஊடகத்துறைக்கு பொருத்தமற்றவர்கள் CCD அமைப்பு தெரிவிப்பு



ஊடகங்கள் அரசியல்வாதிகளை தலைமையாக வைத்து சமூகத்தை விழிப்புட்டும் நிகழ்ச்;சிகளை நடாத்துவது இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் என சமூக அபிவிருத்திக்கான மக்கள் இயக்கம் தெரிவிக்கின்றது. 

இனங்களுக்கிடையில் ஒற்றுமையினையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துகளை வழங்க வேண்டிய ஊடகவியளார்கள் அரசியல் தலைவர்களை மோதவிட்டு பிளவுகளை ஏற்படுத்தும் நிலையினை அண்மையக் காலங்களில் சில ஊடகங்கள் செய்து வருகின்றன. 

ஊடகம் என்பது மாற்றத்தினை ஏற்படுத்தும் ஒரு ஆயுதம் அந்த ஆயுதத்தினைப் பயன்படுத்தும் ஊடகவியளார்கள் பல் காலசார நாட்டில் தங்களது கருத்துக்களை வெளியிடுகின்ற போது ஒரு இனத்தினை தாக்குவதாக அமையக் கூடாது .  

அரசியல் வியாபாரிகள் ஊடகத்தில் இருந்தால் தங்களது கருத்துக்களை மக்களிடம் முன்வைக்க முனைவர்கள் அந்த முன்வைப்பு இரு இனத்தை அல்லது ஒரு கட்சியை தாக்குவதாக அமையும் எனவே அரசியல்வாதிகளை ஊடகங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவேண்டும் ஆனால் நிகழ்சிகளை நடாத்துவதற்கு அழைக்கக் கூடாது. 

ஏக்கூப் பைஸல் 

Post a Comment

0 Comments